தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு : யாருக்கு பொருந்தும் ?

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டது, அதுகுறித்து பல சந்தேகங்கள் அரசு ஊழியர்களுக்கு எழுந்தன, அதற்கு தற்போது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

2020 மே முதல் நாளிலோ அல்லது அதற்கு முன்னதாக ஐம்பத்தெட்டு வயதை எட்டிய மற்றும் மீண்டும் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு அந்த அரசு உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் பொருந்தாது.

ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் 58 வயதானாலும், ஓய்வு பெற்றாலும், கல்வி முடியும் வரை மறு பணியமர்வு செய்யப்பட்டு இருந்தால் அவர்களுக்கு இந்த அரசு உத்தரவு பொருந்தாது.

Also Readதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது வரம்பு 59 ஆக அறிவிப்பு

பணி நீட்டிப்பு காரணமாக சிலர் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள, சிலர் அடிப்படை விதிகளின் விதி 56 (i) (சி) இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிறைவு பெறாமல் இருக்கும், இவர்களுக்கு எல்லாம் இந்த ஓய்வு பெரும் வயது வரம்பு பொருந்தாது

அரசாங்க உத்தரவில் உத்தரவிடப்பட்டுள்ளபடி, 2020 மே 7 ஆம் தேதி பணியில் இருந்தர்வர்கள், வரும் 2020 மே 31ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருக்கும் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

இவ்வாறு அணைத்து துறை செயலாளர்களுக்கு, தலைமை செயலர் சண்முகம் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார்

அக்கடிதத்தை பதிவிறக்கம் செய்ய – இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here