தமிழகத்தில் 50% அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 50% அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும்... இனி வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும்

தமிழ்நாட்டில் 50 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமைகளும் இனி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு : 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு-3 காலகட்டத்தில் 33 சதவீத பணியாளர்களை கொண்டு அரசுப் பணிகள் நடைபெற்று வருகிறது சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காகவும் பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சனிக்கிழமைகளிலும் அரசு பணிகள் மேற்கொள்ளும் நடை முறையை அறிமுகப்படுத்தி 18 05 2020 அன்றிலிருந்து அனைத்து அரசு அலுவலர்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவித்து அரசு முடிவெடுத்துள்ளது

மேலும் 18.05.2020 அன்றிலிருந்து தொகுதி – ‘அ ‘ (Group -A ) அலுவலர்கள் மற்றும் அந்த ஊதிய விகிதம் பெரும் அரசு பணியாளர்கள் அனைவரும் மற்றும் அனைத்து அலுவலகத் தலைவர்களும் (Head of Offices ) பணி நாட்களான ஆறு நாட்களிலும் அலுவலகத்தில் வருகை புரிய வேண்டும். மற்ற அலுவலர்களை பொறுத்த வரை 50% பணியாளர்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசு பணிகளை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் (Containment Zone) உள்ளவர்களுக்கு இது பொருந்தாது சுழற்சி முறையில் அலுவலக பணியில் இல்லாத நாட்களில், அலுவலக பணி தொடர்பாக அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் எந்தவொரு மின்னணு முறையிலும் தொடர்பில் இருக்க வேண்டும்

Also Read : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு : யாருக்கு பொருந்தும் ?

இந்த முறையில் தலைமை செயலகம் முதல் அரசின் வாரியங்கள், நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட அரசுத் துறைகள் அனைத்தும் பின்பற்றுதல் வேண்டும்

உரிய பேருந்து வசதிகள் செய்து தரப்படும். அரசுப் பணியாளர்கள் அனைவரும் இந்த பணிமுறையினை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

காவல், சுகாதாரம், மாவட்ட நிர்வாகம், கருவூலம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற துறைகளை பொறுத்தவரையில் அரசாணை நிலை எண் 172, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நாள் 25 3 2020 வெளியிட்டுள்ள ஆணைகள் பின்பற்ற வேண்டும்

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here