வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் தங்களது பிறப்பு ஆவணங்களில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் சேவைகள் பரவலாகக் கிடைக்கவும், பயன்படுத்தவும் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு அங்கமாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் இ.பி.எஃப்.ஓ ஆவணங்களில் பி.எஃப் உறுப்பினர்கள் தங்களது பிறந்த தேதியில் தவறு இருந்தால் சரிசெய்து கொள்வதற்கு அனுமதிக்குமாறு தனது கள அலுவலகங்களுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளை வழங்கி உள்ளது. இதனால் அவர்களுடைய பிரத்யேக கணக்கு எண் (UAN) வங்கிகளின் கே.ஒய்.சி- க்கு (KYC) ஒத்திசைந்ததாக அமையும்.

ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள பிறந்த தேதியே இந்த திருத்தம் செய்வதற்கு செல்லத் தகுந்த ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டு ஆவணங்களிலும் உள்ள தேதிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசமானது 3 ஆண்டுகளுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும். பி.எஃப் சந்தாதாரர்கள் திருத்தம் செய்வதற்கான வேண்டுகோளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Also Read : ईपीएफओ ने पीएफ सदस्यों को अपने जन्म रिकार्ड ठीक करने की सुविधा प्रदान करने के लिए संशोधित निर्देश जारी किए

ஆன்லைனில் உடனடியாக யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) உடன் இ.பி.எஃப்.ஓ தொடர்பு கொண்டு உறுப்பினர்களின் பிறந்த தேதியை செல்லத்தகுந்ததாக ஆக்குவதற்கு இது உதவியாக இருக்கும்.

ஆன்லைனில் பெறப்படும் வேண்டுகோள்களை உடனடியாக நிறைவேற்றுமாறு கள அலுவலகங்களுக்கு இ.பி.எஃப்.ஓ அறிவுறுத்தி உள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்படும் பணப் பற்றாக்குறையை வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் சமாளிப்பதற்கு வருங்கால வைப்பு நிதியில் சேர்ந்துள்ள தொகையில் இருந்து திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத முன்தொகையைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க இது உதவியாக இருக்கும்.

Latest EPFO News – Click here

Leave a Comment