தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு

மத்திய அரசு அறிவித்ததைப் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஏராளமான நிதி செலவிடப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப் படி உயர்வு நிறுத்தப்பட்டாலும் தற்போது உள்ள அதாவது 17 சதவிகித அகவிலைப் படி தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகை கிடைக்காது

இந்நிலையில், தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைப்பதாக அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நிறுத்திவைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு ஊழியர்களிளின் ஈட்டிய விடுப்பு சம்பளத்தை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

G.O – Signed Copy

Tamilnadu Government Employees Latest Orders

Leave a Comment