கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு/ ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்கள் சந்தா தொகை செலுத்த தபால் நிலையங்களுக்கு செல்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அத்தியாவசிய சேவைகள் என்ற அடிப்படையில் சில தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகிற போதிலும், அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை.
இந்த வாடிக்கையாளர்கள் அனைவரின் வசதி கருதி, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தபால் துறையின், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு இயக்குனரகம், இதற்கான சந்தா செலுத்தும் அவகாசத்தை 2020 ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான சந்தாவை மேற்படி தேதி வரை எந்தவிதமான அபராதமும் இல்லாமல் செலுத்தலாம். ஆன்லைனில் PLI வாடிக்கையாளர் முனையம் வழியாக சந்தா தொகையை செலுத்துமாறு, முனையத்தில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களை இந்தத் துறை கேட்டுக் கொண்டிருந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Central Government Employees News in Tamil – Click here