மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசு ஊழியர் சங்கம் கூட்டமைப்பு வேண்டுகோள்

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

அந்த அரசாணையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 2020 ஜனவரி 1 முதல் வழங்கப்பட வேண்டிய 4 சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது என்றும், மேலும் 01.07.2020 மற்றும் 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17 சதவீத அளவிலேயே நீடிக்கும்.

ஒருவேளை 2021 ஜூலை 1 முதல் அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும்.

மேலும் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகை கிடைக்காது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர் சங்கம் கூட்டமைப்பு (Confederation) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து Confederation வெளியிட்டுள்ள அறிக்கை :

01.01.2020 முதல் 30.06.2021 வரை அகவிலைப்படி உயர்வு முடக்குவதற்கான மத்திய அரசின் முடிவு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடுமையான மற்றும் எதிர்பாராத அதிரிச்சியாகும். ஏற்கனவே பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஒரு நாள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை PM CARES நிதிக்கு வழங்கியுள்ளனர்.

மத்திய அரசின் ஒருதலைப்பட்ச முடிவை கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கிறது. இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து, டி.ஏ & டி.ஆர் முடக்கம் உத்தரவுகளை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also ReadConfederation demand the Government to withdraw the DA & DR freezing orders immediately

Central Government Employees News in Tamil

Leave a Comment