அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கவேண்டிய அவசியமில்லை : மன்மோகன் சிங்

கோவிட் நெருக்கடியால் 2021 ஜூன் வரை 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் அகவிலைப்படியை நிறுத்தி வைக்கவேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங் கூறியுள்ளார், மேலும் இந்த கட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் மீது கஷ்டங்களை சுமத்த வேண்டிய அவசியமில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகார டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, அதில் முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங் , முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Readமத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசு ஊழியர் சங்கம் கூட்டமைப்பு வேண்டுகோள்

 

Leave a Comment