மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு – மத்திய அரசு

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு சென்ற மார்ச் மாதத்தில் அகவிலைப் படியை 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் மிக மோசமாக இருப்பதால் அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப் படி உயர்வு நிறுத்தப்பட்டாலும் தற்போது உள்ள அதாவது 17 சதவிகித அகவிலைப் படி தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த ஆண்டு ஜனவரி முதல் அகவிலைப் படி உயர்வு வழங்கப்படாத நிலையில் மத்திய அரசு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்காணும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  • மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 2020 ஜனவரி 1 முதல் வழங்கப்பட வேண்டிய 4 சதவீத அகவிலைப் படி வழங்கப்படாது.
  • 01.07.2020 மற்றும் 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17 சதவீத அளவிலேயே நீடிக்கும்.
  • ஒருவேளை 2021 ஜூலை 1 முதல் அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும்.
  • மேலும் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகை கிடைக்காது.

அரசாணை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment