மத்திய அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஆரோக்ய சேது செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) உத்தரவிட்டுள்ளது
கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, கொரோனா தொடர்புகளை தடமறிய பயன்படும் ஆரோக்ய சேது செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும்.
மத்திய அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஆரோக்ய சேது செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டிருக்க வேண்டும் என மத்திய பணியாளர், மற்றும் பயிற்சித் துறை (DOPT) உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த செயலியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் பாதுகாப்பு அல்லது குறைவான பாதிப்பு என வந்தால் மட்டுமே அலுவலகம் வர வேண்டும். மிதமான அல்லது அதிக பாதிப்பு என பரிசோதனையில் தெரிய வந்தால் அலுவலகத்துக்கு வர கூடாது. வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Also Read : All the Central Government Employees should download Aarogyasetu App immediately
DOPT உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது
- மத்திய அரசில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் (அவுட்சோர்ஸ் ஊழியர்கள் உட்பட) உடனடியாக தங்கள் மொபைல் போன்களில் `ஆரோக்ய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அலுவலகத்திற்கு செல்வதற்கு முன், ‘ஆரோக்ய சேது’ செயலியில் தங்கள் நிலையை மதிப்பாய்வு செய்து கொள்ளவேண்டும், அதில் ‘பாதுகாப்பானது’ அல்லது ‘குறைந்த ஆபத்து’ நிலையைக் காண்பிக்கும் போது மட்டுமே அலுவலகத்திற்குத் பயணிக்க வேண்டும்.
- புளூடூத் அருகாமையின் அடிப்படையில் (“பாதிக்கப்பட்ட நபருடனான சமீபத்திய தொடர்பு”) கணக்கிடப்பட்ட ஒரு ‘மிதமான’ அல்லது ‘அதிக ஆபத்து’ இருப்பதாக `ஆரோக்ய சேது’ செயலியில் காட்டினால், அதிகாரிகள் / ஊழியர்கள் 14 நாட்களுக்கு அலுவலகத்திற்கு வரக்கூடாது மற்றும் சுயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் அந்த நிலை ‘பாதுகாப்பானது’ அல்லது ‘குறைந்த ஆபத்து’ ஆகும் வரை இதை பின்பற்றவேண்டும் .
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுளளது.
உத்தரவை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மத்திய அரசு ஊழியர்கள் செய்திகள்