மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைக் குறைக்கும் உத்தேசம் எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம்

கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் தற்போதைய பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அலுவலர், பொது குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் ஓய்வூதியங்களைக் குறைக்கப்போகிறது / நிறுத்தப்போகிறது என்று எழுந்துள்ள புரளியால் ஓய்வூதியர்கள் கவலை அடைந்திருப்பதாக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தெளிவாக்கப்பட்டவாறு, ஓய்வூதியத்தைக் குறைக்கும் உத்தேசம் எதுவும் இல்லை என்றும், அதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்படுகிறது. மாறாக, ஓய்வூதியர்களின் நலன்களைக் காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Government Salaries and pension not being reduced – FinMin

 

Leave a Comment