பொதுத்துறை வங்கிகளில் பெரும் ஒருங்கிணைப்பை 1.4.2020 முதல் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

பொதுத்துறை வங்கிகளில் பெரும் ஒருங்கிணைப்பை 1.4.2020 முதல் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத் துறை வங்கிகளாக 1.4.2020 முதல் அரசு மாற்றியமைக்கிறது

உலக நிலையிலும், வணிக முறைகளிலும் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகள் டிஜிட்டல் முறையிலான செயல்பாட்டை உருவாக்க முடியும்

10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத் துறை வங்கிகளாகப் பெரும் இணைப்பு செய்வதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இண்டியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இண்டியாவுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படுகின்றன.

Also Read : Cabinet approves Mega Consolidation in Public Sector Banks from 1.4.2020

இந்த இணைப்பு 1.4.2020 முதல் அமலுக்கு வரும். இதனால், 7 பெரிய பொதுத்துறை வங்கிகள் உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் 8 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். இந்தப் பெரும் இணைப்பு உலகளாவிய வங்கிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு நிலை உயர உதவும். இந்திய அளவிலும், உலக அளவிலும் போட்டியிடவும் முடியும்.

Leave a Comment